பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் ! - பள்ளிக்கல்வித்துறை
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தேர்வுகள் துறை இயக்குனர் ஆனை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா அதிகரித்துவரும் காரணத்தினால் திருப்புதல் தேர்வில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது என்னவென்றால், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி நடக்கவிருக்கும் முதல் திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும். மேலும் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 14ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த விடுமுறை நாட்களில் தங்களை திருப்புதல் தேர்விற்கு தயார்படுத்திக் கொள்ளுமாறு கல்விக்கடல் இணையதளத்தின் மூலமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கொரோனா அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், இந்த தேர்வு மதிப்பெண்களை பொதுத்தேர்வு மதிப்பெண்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்திலேயே இந்த தேர்வு மிகவும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவிருக்கிறது. திருப்புதல் தேர்விற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 19ஆம் தேதி நடக்கவிருக்கும் முதல் திருப்புதல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பு பற்றி இன்றளவும் தெரியவில்லை எனவே தங்களுக்கு தெரிந்த மாணவச் செல்வங்களுக்கு இந்த மாதிரி வினாத்தாள்களை பகிரவும்.
Comments
Post a Comment