தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை விடுமுறை
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை விடுமுறை. 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை, 17 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (ஆணை வெளியிட்டு தமிழக அரசு இன்று அறிவிப்பு) , 18ஆம் தேதி தைப்பூசத் திருநாள் விடுமுறை. இதனால் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரித் திங்கள் 7ஆம் நாள் முதல், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும். 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022. தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022(திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான பணி நாளாக 29.01.2022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.
விடுமுறை முடிந்தவுடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு.
மாணவர்கள் இந்த ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையை தங்கள் திருப்புதல் தேர்வு Study Holiday ஆக எடுத்துக் கொண்டு படிக்குமாறு நமது கல்விக் கடல் (https://www.kalvikadal.in) குழுவின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இந்த ஐந்து நாட்கள் முடித்து நீங்கள் பள்ளிக்கு திரும்பும் 19 ஆம் தேதியே பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கவிருக்கிறது.
எனவே, மாணவர்கள் இந்த விடுமுறை நாட்களில் தங்களை திருப்புதல் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ளலாம்.
💐 திருப்புதல் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள் !
0 Comments