திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருக்கும் திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு இருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
1. மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கிடையே பரிமாற்றம் செய்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு தேர்வு முடிவுற்றவுடன் விடைத்தாள்களை கட்டுகளாக கட்டி அன்றைய தினமே சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்படும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
3. விடைத்தாள்களை காலதாமதம் செய்யாமல் மதிப்பீடு செய்து முடிக்கப்படவேண்டும். 4. பிற பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விடைத்தாள்களை சரியான முறையில் திருத்தி மதிப்பெண்கள் வழங்குதல் வேண்டும்.
5.மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்ட பள்ளியிலேயே பாதுகாப்பாக வைத்திருக்குமாறும்,மதிப்பெண்கள் விவரங்களை பள்ளி/பதிவெண்/ பாடம் /மொழி வாரியாக பட்டியலிட்டு இரு நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
6. இம்மதிப்பெண்கள் EMIS மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த வழிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்திடுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments