11th Revision Test Time Table & Syllabus April 2022


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

11th Standard Revision Test Time Table & Syllabus April 2022


11th Revision Test Syllabus and Time Table April 2022
 11ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை மற்றும் பாடத்திட்டம் வெளியீடு

cht-toc

11th revision test Time Table April 2022

11th Revision Exam Time Table April 2022
Director of Government Examination
Click here for Official Order Copy
Date Day Subject
05.04.2022 Tuesday Language
06.04.2022 Wednesday English
07.04.2022 Thursday Computer Science, Computer Application, Bio-Chemistry, Advanced Tamil, Commutative English, Statistics   
08.04.2022 Friday Chemistry, Accountancy, Geography
11.04.2022 MondayMathematics, Zoology, Commerce
12.04.2022 Tuesday Biology, Botany, History, Business Maths, Statistics 
13.04.2022 WednesdayPhysics , Economics, Computer Technology

11th Revision test Syllabus April 2022


      10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு ஏற்கனவே அவர்களுக்கு இரண்டு கட்ட திருப்புதல் தேர்வு அட்டவணை மற்றும் பாடத்திட்டம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு இம்மாத இறுதியில் மார்ச் இருபத்தி எட்டாம் தேதி நடக்கவிருக்கிறது இரண்டு நாட்களுக்கு முன் தமிழக அரசு இந்த கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருந்தது. 

    அதில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு மட்டுமே ஏற்கனவே திருப்புதல் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் திடீரென்று பொதுத்தேர்வு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெறும் அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியானதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

    எனவே மாணவர்களை தயார்படுத்த விதமாக தற்போது பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது திருப்புதல் தேர்வு நடத்த அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது. 

       இதன்படி அவர்களுக்கான திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல் மாதம் 5ம் தேதி தமிழ் ஏப்ரல் 6ஆம் தேதி ஆங்கிலம் ஏப்ரல் 7ஆம் தேதி கணினி அறிவியல் கணினி பயன்பாடுகள் ஏப்ரல் 8ஆம் தேதி வேதியியல் கணக்குப்பதிவியல் புவியியல் ஏப்ரல் 11ஆம் தேதி கணிதம் உயிரியல் வணிகவியல் 12ஆம் தேதி உயிரியல் தாவரவியல் வரலாறு மற்றும் பிற தொழிற்கல்வி பாடங்கள் ஏப்ரல் 13-ஆம் தேதி இயற்பியல் பொருளியல் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது.

     ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments