10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்தார்.
அதன்படி,
10ஆம் வகுப்பு பொது தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும்.
11ஆம் வகுப்பு பொது தேர்வு மே 10 -ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும்.
10 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெறும்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 11ஆம்வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 7ஆம் தேதியும் , 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments