திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : அரசு தேர்வுத்துறை மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு திருப்புதல் தேர்வு.
மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 19.01-2022 முதல் 28-012022 வரை நடைபெற உள்ளது. தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தேர்வை சிறப்பாக நடத்துவதற்கான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிப்பது சார்பான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
வினாத்தாள் கட்டு காப்பு மையப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
1. வினாத்தாள்கள் 13-01-2022க்குள் வினாத்தாள் கட்டு காப்பு மையம் (Nodal Point)க்கு வழங்கப்படும்.
2. வினாத்தாள்க தங்கள் மையத்திற்குரிய பள்ளிகளுக்கு தேர்வுகால அட்டவணை தேதிப்படி பள்ளிவாரியாக (தனித் தனியாக) ஒரே கட்டமாக வழங்கப்படும்.
3 தங்கள் மையத்தில் உள்ள பள்ளிகளின் பெயர்பட்டியலுக்கு ஏற்ப வினாத்தாட்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
4. வினாத்தாள் சரிபார்க்கும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு வினாத்தாள் கட்டுக்களை காண்பிக்க வேண்டாம். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பள்ளி பெயர் பட்டியல்களை காண்பித்து கையெழுத்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
5. தேதிவாரியாக வழங்கப்படும் வினாத்தாள்களை அந்தந்த தேதிகளில் பிரித்து தாங்களே வழங்க வேண்டும்.
6. தங்கள் மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட பள்ளியில் இருந்து வரும் நபர்களை வினாத்தாள் கட்டுகளை எடுக்க சொல்லக் கூடாது
7. தினமும் வினாத்தாள் வழங்கப்பட்டதற்கு சார்ந்த பள்ளிகளில் இருந்து வரும் ஆசிரியரிடம் நேரம் மற்றும் கையெழுத்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
8. காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாள் வழங்கப்பட வேண்டும். குறித்த காலத்தில் வினாத்தாள் எடுத்து செல்லாத பள்ளிகளின் விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர் / நேர்முக உதவியாளர்/ தேர்வு அமைப்பாளர் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
9. தங்கள் மையத்திற்குரிய பள்ளிகளில் ஏதேனும் பள்ளிக்கு வினாத்தாள் வரவில்லை எனில் உடனே தேர்வுகள் அமைப்பாளரை தொடர்பு கொண்டு வினாத்தாளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. வினாத்தாள்களை அத்தாட்சிக் கடிதம் கொண்டு வரும் நபரிடம் மட்டுமே வழங்க வேண்டும். தினமும் ஒரே நபர் வினாத்தாள்களை பெற்றுக் கொள்ளுவதற்கு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை அறிவுறுத்த வேண்டும்.
11. எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு முறையாக திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
1. 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு நடைபெறும் திருப்புதல் தேர்வு - 1 கால அட்டவணை தங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2. தேர்வு தேதி மாணவர்கள் அறியும் வகையில் பள்ளி தகவல்பலகை மற்றும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
3.SOP.ஐமுழுமையாக கடைபிடித்து தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
4.ஒரு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும்.
5. மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்தவேண்டும்.
6. பள்ளி வளாகத்தை தூய்மையாகவும், தேர்வு அறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. மாணவர்களின் வருகையை 100% உறுதிப்படுத்த வேண்டும்.
8. வினாத்தாள் பெறப்பட்டவுடன் மாணவர்களின் எண்ணிக்கேற்ப இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
9. தேர்வுகள் அனைத்தும் பொதுத்தேர்வு போல் நடத்தப்பட வேண்டும்.
10. தினமும் அறை கண்காணிப்பாளர் ஒதுக்கீடு மாணவர்கள் வருகை ஆகியவற்றிக்கு பதிவேடு பராமரிக்க வேண்டும்.
11. விடைத்தாள்களை தேர்வு முடிந்தவுடன் 10ஆம் வகுப்பு (10 மணி முதல் 1மணி வரை) 12 ஆம் வகுப்பு (2மணி முதல் 5 மணி வரை) 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தனி கட்டுகளாக கட்டி சீல் இட்டு தலைமை ஆசிரியர் தனி அலமாரியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
12. தேர்வுகள் அனைத்தும் முடிந்தவுடன் முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் அறிவுறுத்தப்படும் தேதி மற்றும் இடத்தில் விடைத்தாள் கட்டுகள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்.
13.தங்கள் பள்ளிக்கு மதிப்பீடு செய்வதற்கான விடைத்தாள்களை பெறுவதற்கு முதன்மைக் கல்வி அவர்களால் தேதியும் இடமும் பின்னர் தெரிவிக்கப்படும்.
14.விடைத்தாளில் பள்ளி பெயர். முத்திரை இடம்பெறக் கூடாது. தேர்வு எண். வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம்பெற வேண்டும்.
15. தேர்வு எண் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும்.
16. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்ட பள்ளியிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்பட்டவை
ஆகும்.
17. மதிப்பெண் பட்டியல் உரிய படிவத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் குறிப்பிடப்படும் தேதியில் மூன்று பிரதிகள் மதிப்பீடு செய்யப்பட்ட பள்ளித் தலைமையசிரியரின் கையொப்பத்துடன் ஒப்படைக்கப்படவேண்டும்.
18. தேர்வுக் கட்டண விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
19. தேர்வுகள் அனைத்தையும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறாக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments