10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகளை நடத்த ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருந்தது. முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி 29ம் தேதி நிறைவடைய இருந்தது, இரண்டாம் திருப்புதல் தேர்வானது மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருந்தது, இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அவர்களுக்கு 19ஆம் தேதி முதல் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வையும் ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மழை கால விடுமுறை, அரையாண்டு விடுமுறை தற்போது கொரோனா பரவல் காரணமாக விடுமுறை என கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் விடுமுறைலேயே கழிந்துவிட்டன. இதனால் அவர்களுக்கு பாடதிட்டங்கள் ஏதேனும் குறைக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது, இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றிய திட்டம் இல்லை என்று தெரிவித்தார். எனவே அவர்களுக்கு பாட திட்டங்களை நடத்தி முடிக்க குறைந்த கால அவகாசமே உள்ளதால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த இரண்டு திருப்புதல் தேர்வுகள் ரத்து செய்து ஒரே ஒரு திருப்புதல் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்த கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார் .
0 Comments