10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பா?.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து அரசிடம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார், கொரோனா குறைந்தால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார் .
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் 1 திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று கூறினார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது . மற்றும் 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்த கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாகவும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் High-Tech Lab வழியாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகள் என்பது "வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக இருக்கும்" வகையில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளதாக கூறினார்.மற்றும் இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments