10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக் கல்வி


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.



இணைய வழி வகுப்புகளால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நலன் பாதுகாக்கப்படும் என உயர்நீதிமன்றம் கருத்து.

        தமிழகத்தில் தற்பொழுது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களின் எதிர்கால கல்வியை கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக நேரடி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலானது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக 15 ஆயிரத்தை தாண்டி நேற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் திரு ஆனந்த் அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின்  விசாரணையானது இன்று நடைபெற்றது. 

      தமிழகத்தில் தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது. அப்போது, "மூன்றாவது அலை பரவக்கூடிய இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 10 11 12 பள்ளிகளை மூடிவிட்டு ஆன்லைன் முறையில் பாடம் நடத்தலாமே" என்று நீதிபதி ஆதிகேசவலு கருத்து தெரிவித்தார்.
மேலும் தலைமை நீதிபதி கூறியதாவது,"அரசின் அறிவிப்பில் நீதிமன்றம் தலையிட இயலாது ஏனெனில் ஒரு நாளைக்கு எவ்வளவு நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள், அதன் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்தெல்லாம் அரசுக்கு மட்டும்தான் தெரியும். 

      அதனால் மருத்துவ வல்லுநர்கள் கூறுவதன் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவு இறுதியானது அதில் நீதிமன்றம் ஏதும் தலையிட இயலாது. "என்று கூறினார். அதன் பின்னர் வழக்கறிஞர் ஆனந்த் அவர்கள் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிபதியிடம் தெரிவித்துவிட்டார்.

தமிழகத்தில் தற்போது 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருதி 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வியே சிறந்ததாக இருக்கும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை அறிந்தவுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கலுக்குப் பிறகு விடுமுறை அறிவிக்கலாம் என்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாணவர்கள் ஜனவரி 19ஆம் தேதி நடக்கவிருக்கும் திருப்புதல் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளவும் என்று கல்விக்கடல் இணையதளத்தின் மூலமாக தெரிவிக்கப்படுகிறது. 


      ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments