10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை ? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை


தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பானது 23 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,459 பதிவாகியுள்ளது. 

        தமிழகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. (அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை) 

      10 முதல் 12ம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய அன்றைய தினமே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலோசனை முடிவுக்காக பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில், ஆலோசனை முடிந்த பின்னரும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த ஆலோசனைகள் முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. மாணவர்களும் தினசரி அச்சத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருவதை காண முடிகிறது.

        தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதனை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

     இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய திருப்புதல் தேர்விற்கு தொடர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கல்விக்கடல் வலைத்தளத்தின் மூலமாக  தெரிவித்துக் கொள்கிறோம். 


ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments