தமிழகத்தில் , நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 , 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் . தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், பள்ளிகள் திறப்பு பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது.
இந்த கருத்து கேட்பு கூட்டமானது 2 நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் பெற்றோர்களிடம் வாக்குகளாக பெற்று அதை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பள்ளிகள் ஒப்படைத்தனர்ய.
இந்த கடிதங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்த பின்பு , இன்று அந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் (50%) மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இப்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது .
இந்த கருத்துக்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை ஆனது தமிழக அரசிற்கு தெரிவித்துள்ளதாகவும் எனவே இதன் பின் தமிழக அரசு பள்ளிகள் திறப்பு பற்றி முடிவை எடுக்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Comments
Post a Comment