12ஆம் வகுப்பு கணித பாடத்தின் வினாத்தாள் மாற்றம் அமைச்சர் அறிவிப்பு
நாளை (O4.04.2022) நடக்கவிருந்த பனிரெண்டாம் வகுப்பிற்கான கணித பாடத்தின் இரண்டாம் திருப்புதல் தேர்வின் Type - A மற்றும் Type - B வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் இன்று கசிந்தது.

 

ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் கசிந்து அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடும்போது முதல் திருப்புதல் தேர்வில் நடைபெற்ற தவறு இரண்டாம் திருப்புதல் தேர்வில் நடைபெறாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.  கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 12 ஆம் வகுப்பிற்கான கணித பாடத்தின் கேள்வித்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. பின்னர் தொலைக்காட்சிகளிலும் இது பற்றிய செய்தி ஒளிபரப்பப்பட்டது. இது கல்வி அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது.பின்னர் இதுபற்றி Twitter-ல் கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை நடைபெறவிருந்த  கணித பாடத்தின் வினாத்தாள் மாற்றப்படும் என்று அறிவித்தார்.      ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .