மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே பொதுத் தேர்வில் வினாக்கள் இடம்பெறும் நடத்தி முடிக்கப்படாத பாடங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் கேட்கப்படமாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். 


     தமிழகத்தில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில் மார்ச் 2-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருந்தார். இதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி பொதுத்தேர்வு நிறைவடைகிறது. 

     இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்த பாடத்திட்டத்தில் மூன்று பங்குகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. எனவே மீதம் உள்ள பாடங்களிலிருந்து பொதுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படுமா! என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இது தொடர்பாக இன்று அளித்த பேட்டி ஒன்றில் செய்தியாளர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது இந்த படங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் இடம் பெறுமா ? என்ற கேள்வியை எழுப்பினார்,  இதற்கு பதிலளித்த நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுக்கு நடத்தி முடிக்காத பாடங்களில் இருந்து பொதுத் தேர்வு வினாக்கள் இடம் பெறுவது தவறு எனவே அவர்களுக்கு நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து வினாக்கள் இடம் பெறாது என்றும் தெரிவித்திருந்தார். 


   ஏற்கனவே முதல் திருப்புதல் தேர்வு நான்கு பாடங்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் நான்கு பாடங்களும் பாட வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இவைகளில் இருந்து தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் , இன்றுடன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நிறைவடைந்துள்ளது. இதன்பிறகு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளது இதில் மாணவர்கள் ஏற்கனவே படித்த பாடங்களை திருப்புதல் செய்வதற்கும் அவர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்பதற்கும் இந்த நாட்கள் தேவைப்படும் 24-ஆம் தேதிக்கு பிறகு அவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்குகிறது. 

      எனவே ஏற்கனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் உள்ள பாடங்கள் மட்டுமே பொதுத்தேர்வு பாடங்களாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வரும் நாட்களில் பள்ளிக்கல்வித்துறை ஏதேனும் விளக்கத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால் கொடுக்கப்பட்ட குறுகிய காலத்தில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவும் அவற்றை மாணவர்கள் படிக்கும் கால அவகாசமும் இல்லை.


   ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .