நாளை மதியம் 2 மணிக்கு 12ம் வகுப்பிற்கு நடக்கக்கூடிய கணிதம் முதல் திருப்புதல் தேர்விற்கான வினாத்தாள் ஷேர் சாட்டில் கசிந்தது.
நாளை 2 மணிக்கு நடைபெற வேண்டிய வினாத்தாள் இன்றே வெளியானதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என கல்வித்துறை சார்ந்த அனைவரும் அதிர்ச்சி. ஏற்கனவே கணினி பயன்பாடுகள், வேதியியல் வினாத்தாள்களும் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வினாத்தாள் ஆனது தற்போது வாட்ஸ் அப் மற்றும் ஷேர் சாட் போன்ற சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது.
இந்த வினாத்தாளை நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதற்கான காரணம் இந்த வினாத்தாள் உண்மையான வினாத்தாள் தான் என்பதை கல்வித் துறை அதிகாரிகளோ அல்லது தேர்வுகள் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே. இதுவரை இந்த வினாத்தாள் தான் நாளை நடைபெற வேண்டிய வினாத்தாள் என்று நாங்கள் குறிப்பிடவில்லை.
இந்த வினாத்தாள் உண்மையிலேயே நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருக்கும் கணித வினாத்தாள் தான் என்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதை தங்களுக்கு தெரிந்த கல்வித்துறை அதிகாரிகளிடம் மற்றும் ஊடகவியாளர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments