10.02.2022 அன்றுநடைபெறவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில பாடம் முதல் திருப்புதல்தேர்வு தேதி மாற்றம் .
10 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 10 .02. 2022 அன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த 10 மற்றும்12ஆம் வகுப்பு ஆங்கில பாடம் முதல் திருப்புதல் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.02.2022 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றையதினம் நடைபெறவிருந்த 10 மற்றும்12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாட திருப்புதல் தேர்வு 17.02.2022 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .
0 Comments