TC , Mark Sheet உட்பட 23 சான்றிதழ்களை இனி இ-சேவை மையங்களில் பெறலாம்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை, தேர்வுகள் துறை போன்ற அனைத்து துறைகளிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான இருபத்திமூன்று சான்றிதழ்களை இனி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் இல்லங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களில் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
எந்தெந்த சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளோம். இந்த தகவலை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிரவும் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்.
S.no | Cerificate Name |
---|---|
1 | 1 முதல் 12-ஆம் வகுப்பிற்கான கல்வி இணைச் சான்று (பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பயின்றமைக்கான கல்வி இணைச் சான்றிதழ். (Equivalence Certificate) , (Other States and Countries). |
2 | தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் (NIOS) பிற மாநிலங்களில் 10, 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்று. (Equivalence Certificate) |
3 | பிற மாநிலத்தில் 10, 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்று. (Equivalence Certificate) |
4 | திறந்தவெளிப் பள்ளியில் படித்ததற்கான State Institute of Open School (SIOS) 10-ஆம் வகுப்பு முடித்தமைக்கான உண்மைத் தன்மைச் சான்று 1983-1984 முதல் 2001-2002. (Genuiness of Open Schools in 10th Std.). |
5 | உண்மைத் தன்மைச் சான்றிதழ் (Genuiness Certificate) 8, 10, 1, 12 & D.El.Ed., (Diploma in Elementary Education) (தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) வகுப்புகளுக்கு |
6 | தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று (PSTM-Persons Studied in Tamil Medium). (பள்ளியில் நேரடியாக பயின்ற மாணவர்களுக்கு). |
7 | தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று (PSTM Persons Studied in Tamil Medium). (தனித் தேர்வர்களுக்கு). |
8 | D.El.Ed., (Diploma in Elementary Education), (தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று. (PSTM Persons Studied in Tamil Medium). |
9 | இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் - 8, 10, 11, 12 & D.El.Ed., (Diploma in Elementary Education), (தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) |
10 | தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் Certified Copy of Mark List (CCM) - 8, 10, 11, 12 & D.El.Ed. (Diploma in Elementary Education), (தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) |
11 | மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் - 8, 10, 11, 12 & D.El.Ed., (Diploma in Elementary Education), (தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) |
12 | 10 & 12-ஆம் வகுப்பிற்கான புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate). |
13 | பிற வகுப்புகளுக்கான புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate). |
14 | மதிப்பீட்டுச் சான்றிதழ் (Evaluation Certificate).- D.El.Ed., (Diploma in Elementary Education), Other States. (மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு). |
15 | பள்ளி மாற்றுச் சான்றிதழ் (இரண்டாம் படி). |
16 | பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ளுதல் |
17 | D.El.Ed.(Diploma in Elementary Education), (தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ். |
18 | இரண்டாம்படி ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்று (Issuance of Duplicate Certificate for TET Paper-I & II). |
19 | தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (2ஆண்டுகள்) ஆசிரியராகக் கூடிய மாணவர்களுக்கு பணி முன் பயிற்சி வழங்குதல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல். (Who have completed Diploma in Elementary Education (2 years)] (To Provide Pre - Service Training to Prospective Students To Obtain Transfer Certificate). |
20 | உடற்கல்வியில் பட்டயப் படிப்பு - சுயநிதி நிறுவனங்களின் (2 ஆண்டுகள்) ஆசிரியராகக் கூடிய மாணவ ஆசிரியர்களுக்கு பணி முன் பயிற்சி வழங்குதல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல். (Who have completed Diploma in Physical Education in Self-Finance Institutes (2 years)] - (To Provide Pre -Service Training to Prospect e Students -To Obtain Transfer Certificate). |
21 | விளையாட்டு முன்னுரிமைச் சான்று (Sports Quota Certificate). |
22 | தனித் தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தல் (Private candidates apply for exam) |
23 | நன்னடத்தைச் சான்று. (Conduct Certificate) |
0 Comments