தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்க முடிவு என்ற தகவல் உண்மையா ? பொய்யா ?
தமிழகத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி நிறைவடையும் நிலையில் இன்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் காலை 11 மணி அளவில் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனையை தொடங்கினார்.
இந்த ஆலோசனையின் முடிவு இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் அனுமதி அளித்தால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்ற கூடுதல் தகவலையும் அவர் தெரிவித்தார்.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு நமது கல்விக்கடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் தகவல் பகிரப்படும் எனவே இதுவரை வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணையாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி இணைந்து கொள்ளவும்.
0 Comments