தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். வரும் 31-ஆம் தேதி வரையில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும், பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் வரும் ஜன. 14 முதல் ஜன. 18 வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை.
- வரும் 16ஆம் தேதி மீண்டும் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு!
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments