தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஓரிரு நாட்களுக்கு முன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்றால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தலாமா வேண்டாமா என்பதைப் பற்றி தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் இன்றைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வகுப்புகளுக்கான அட்டவணையை முதல்வருடன் ஆலோசனை பெற்ற பிறகு வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
0 Comments